மண்டைக்காடு அருகே உள்ள பரப்பற்று பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கண்ணன் (38). ஆட்டோ டிரைவரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும் கண்ணனுக்கு மதுப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. தனக்கு திருமணம் நடக்காததால் கண்ணன் மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று (ஜனவரி 22) வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற மண்டைக்காடு போலீசார் கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














