மார்த்தாண்டம்: சாலையில் பழுதாகி நின்ற லாரியால் நெரிசல்

0
161

மார்த்தாண்டம் வழியாக கேரளாவுக்கு தினம் தோறும் கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு அதிக அளவில் டாரஸ் லாரிகள் செல்கின்றன. எனவே காலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி நேரம் மேம்பாலத்தின் அடி பகுதியில் கனரக லாரிகள், கண்டெய்னர் லாரிகள் மற்றும் பெரிய வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்த்தாண்டம் மேம்பாலத்தின் வழியாகவும் முழுமையாக இயக்க தடை உள்ளது. 

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 21) மாலை கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த டாரஸ் லாரி ஒன்று மார்த்தாண்டம் சந்திப்பு அருகே திடீரென பின்பக்க ஜாயின்ட் பேரிங் உடைந்து நின்றது. இதை கண்ட டிரைவர் லாரியை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தினார். ஆனால் பாலத்தின் அடியில் குறுகிய சாலை என்பதால் அந்த பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து பழுது சரி செய்யப்பட்டு லாரி புறப்பட்டு சென்றது. இதன் பின்னரே வாகன போக்குவரத்து சீரானது. மார்த்தாண்டம் நகர பகுதிக்குள் கனரக லாரிகளை நாள் முழுவதும் அனுமதிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here