கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் தலைமையில், மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் 24.01.2025 அன்று காலை 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக நாஞ்சில் கூட்டரங்கம், நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களின் கோரிக்கைகளுடன் அன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஆட்சியர் நேற்று அறிக்கை விடுத்துள்ளார்.














