குளச்சல்: பைக்குகள் மோதல்; 3 பேர் காயம்

0
393

குளச்சல் அருகே செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (69) கேபிள் தொழில் நடத்தி வருகிறார். நேற்று மாலை இவர் திக்கணங்கோடு – குளச்சல் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கட்டபுளி என்ற பகுதியில் சென்றபோது சகாயநகரை சேர்ந்த டேவிட் (22) என்பவர் ஓட்டி வந்த பைக் செல்வராஜ் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வராஜ் படுகாயம் அடைந்தார். அதேபோல் கீழே விழுந்த டேவிட்டும் அவரது பைக்கின் பின்னால் இருந்த ஜோஷி (19) ஆகியோரும் காயம் அடைந்தனர். இதில் டேவிட் ஜோஷி இருவரும் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். படுகாயம் அடைந்த செல்வராஜ் நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் டேவிட் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here