குலசேகரம்: பாதை தகராறில் வாலிபருக்கு வெட்டு; தாய்க்கு அடிஉதை

0
279

குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் ஆகாஷ் (25) பெயிண்டர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பத்மராஜா (57) மற்றும் சுவாமிதாஸ் மகன்கள் கலைப்பிரபின், கலைச்செல்வன், கலைப்பிரபு ஆகியோருக்கும் நடைபாதை சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 21) மாலை ஆகாஷ் வீட்டுக்கு செல்லும் போது கலைப்பிரபின், கலைச்செல்வன், கலைப்பிரபு, பத்மராஜ் மற்றும் கண்டால் தெரியும் 3 பேர் பைக்கில் ஆயுதங்களுடன் வந்து ஆகாசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கலைப்பிரபின் தனது கையில் வைத்திருந்த வெட்டுக்கத்தியால் ஆகாஷை வெட்டியதில் ஆகாஷின் இடது கையில் வெட்டு விழுந்தது. 

சத்தம் கேட்டு ஓடி வந்த ஆகாஷின் தாயார் கோமதியையும் தாக்கி, அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஆகாஷ் மற்றும் கோமதி ஆகியோர் குலசேகரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

இது குறித்த புகாரின் பேரில் கலைப்பிரபின், கலைச்செல்வன், கலைப்பிரபு, பத்மராஜ் மற்றும் கண்டால் தெரியும் மூன்று பேர் என 7 பேர் மீது குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here