இயக்குநர் அஜய் ஞானமுத்து திருமணம்!

0
256

‘டிமான்டி காலனி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், அஜய் ஞானமுத்து. தொடர்ந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் நடித்த ‘இமைக்கா நொடிகள்’, விக்ரம் நடித்த ‘கோப்ரா’, அருள்நிதி நடித்த ‘டிமான்டி காலனி 2’ படங்களை இயக்கினார்.

இவருக்கும் ஷிமோனா ராஜ்குமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இவர்கள் திருமணம் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அன்று மாலை, நெம்மேலியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள், திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here