தக்கலை: தந்தையை இரும்பு கம்பியால் தாக்கிய மகன் கைது

0
231

தக்கலை அருகே உள்ள ஆசான்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை (62). இவரது மகன் முருகேஷ் (32). இவருக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். ஆனால் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார். இதனால் முருகேஷ் தந்தை கிருஷ்ணபிள்ளையுடன் வசித்து வருகிறார். மது குடிக்கும் பழக்கம் உள்ள முருகேஷ் எப்போதாவது வீட்டுக்கு வருவதுண்டு. நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வீட்டுக்கு வந்த முருகேஷ் தூங்கிக் கொண்டிருந்த தந்தையை எழுப்பி தகராறு செய்துள்ளார். மேலும் வீட்டைவிட்டு வெளியே போ என கிருஷ்ணபிள்ளையை தள்ளிவிட்டு இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணபிள்ளை தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here