குலசேகரம்:   திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை

0
260

குலசேகரம் அருகே உள்ள பெருஞ்சாணி பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (28). பெட்ரோல் நிலைய ஊழியர். இவரது மனைவி பிரவீணா (23). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகிறது. ஜஸ்டின் பெற்றோர் அவர் சிறுவயதிலேயே இறந்துவிட்டனர். ஜஸ்டின் தனது நண்பர் ஒருவருக்கு ரூபாய் 7 லட்சத்தை கடனாக வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்தப் பணத்தை அவர் திருப்பித் தரவில்லை என தெரிகிறது. 

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரவீணா உடனடியாக குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றார். 

அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து பிரவீணா குலசேகரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here