திருவட்டார்: ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் மோதல்

0
240

திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் ஆமோஸ் (57). இவரது மகன் அன்சியூ( 24).   மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (52). இவரது மகன் சேம் லாரன்ஸ் (26). இதில் ஆமோஸ், சுரேஷ் இருவரும் அரசு ஒப்பந்ததாரர்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி பிரச்சனை தொடர்பாக இருவரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இருதரப்பினரும் முன் விரோதத்தில் உள்ளனர்.
       இந்த நிலையில் நேற்று காலை திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நான்கு பேரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆமோஸ் மற்றும் சுரேஷ் ஆகியோர் திடீரென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாய் தகராறு முற்றி நான்கு பேரும் மாறி மாறி கைகலப்பில் ஈடுபட்டனர்.

      இதை பார்த்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து ஓட்டம் பிடித்தார்கள். இது தொடர்ந்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் திருவட்டார் போலீசில் தகவல் தெரிவித்தனர். போலீசார் நான்கு பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here