சென்னை மாநகர பேருந்துகளில் காணும் பொங்கலுக்கு ரூ.2 கோடி வசூல்

0
256

மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் காணும் பொங்கலுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் ரூ.2 கோடி வசூலாகியுள்ளது.

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள 32 பணிமனைகளுக்கும் வசூல் கட்டணத்துக்கான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.

அதன் அடிப்படையில் சென்னையில் காணும் பொங்கல் வசூல் இலக்காக மொத்தம் ரூ.2.75 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள் மூலம் ரூ.2.06 கோடி வசூலாகியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here