சென்னை டி 20 போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை

0
183

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி 20 ஆட்டங்கள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் டி 20 தொடர் வரும் 22-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. டி 20 தொடரின் 2-வது ஆட்டம் 25-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை (12-ம் தேதி) காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

டிக்கெட் விற்பனை இணைதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. https://www.district.in/ என்ற இணையதளம் வாயிலாக பொதுமக்கள் டிக்கெட்களை பெற்றுக்கொள்ளலாம். சி, டி, இ கேலரிகளின் கீழ்வரிசை டிக்கெட் ரூ.1,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஐ, ஜே, கே கேலரிகளின் கீழ்வரிசை டிக்கெட் விலை ரூ.2,500 எனவும், மேல்வரிசை டிக்கெட் விலை ரூ.1,500 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கேஎம்கே மேல்தளம் கேலரி டிக்கெட் ரூ.5 ஆயிரம் எனவும் சி, டி, இ கேலரிகளில் உள்ள ஏ.சி. பாக்ஸ் டிக்கெட் ரூ.10 ஆயிரம் எனவும், ஹெச் கேலரி ஏ.சி. பாக்ஸ் டிக்கெட் விலை ரூ.15 ஆயிரம் எனவும், ஐ, ஜே ஏ.சி. பாக்ஸ் டிக்கெட் விலை ரூ.12 ஆயிரம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here