மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார் மனைவி பபி (40). அதே பகுதியில் வசிப்பவர் நாகராஜன் மனைவி லலிதா. இந்த நிலையில் லலிதா அடிக்கடி பபி குறித்து அவதூறு பேசியதாக கூறப்படுகிறது. இதை பபி தட்டிக் கேட்டுள்ளார். இதனால் பபி மீது லலிதாவின் மகன் கார்த்திக்கு (25) என்பவருக்கு கோபம் இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் பவி தனது வீட்டில் இருந்த நேரத்தில் அங்கு கார்த்திக் உட்பட இரண்டு பேர் சென்று அத்துமீறி நுழைந்து பபியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கார்த்திக்கு பபியின் கன்னத்தில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் பபியை அவமானப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பபி அளித்த புகாரின் பேரில் கார்த்திக் மற்றும் கண்டால் தெரியும் ஒருவர் என 2 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














