கீழ்குளம்: ரூ. 72 லட்சத்தில் சாலை சீரமைப்பு

0
158

கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு உட்பட்ட குமரி நகர் – அருவை சாலை மற்றும் உடப்பு என்ற பகுதிக்கு செல்லக்கூடிய சாலை பேருந்து வழித்தடம் ஆகும். மார்த்தாண்டத்தில் இருந்து விழுந்தையபலம் வழியாக கீழ்குளம், இனயம் செல்லும் பல பேருந்துகள் இந்த சாலை வழியாக செல்கின்றன. இந்த சாலையில் பேருந்து செல்ல முடியாமலும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும் கடந்த 25 ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்டது. 

இந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு நிதியில் இருந்து சுமார் 72 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பணியினை இன்று 8-ம் தேதி காலை பேரூராட்சி தலைவர் சரளா கோபால், தி.மு.க கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் பி. கோபால், வார்டு உறுப்பினர் சோபா உட்பட பலர் பார்வையிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here