கன்னியாகுமரி மாவட்டம் மணிக்கட்டி பொட்டல் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சகாய நிர்மலா, 45. இவருக்கு குஞ்சன் விளையில் ரூ. 18 லட்சத்தில் வீடு கட்டிக் கொடுப்பதாக ராஜ்குமார் என்பவர் கூறியுள்ளார். ஆனால் வீட்டை முழுமையாக கட்டி முடிக்கவில்லை. இது குறித்து சகாய நிர்மலா கேட்ட நிலையில், அவருக்கு ராஜ்குமார் மற்றும் டோலன் ஆகியோர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நேசமணி நகர் போலீசார் நேற்று வழக்குப் பதிந்துள்ளனர்.














