குளச்சல் பயணியர் விடுதி அருகே முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று 7-ம் தேதி காலை சுமார் 6:15 மணி அளவில் கோவில் நிர்வாக தலைவர் மனோகரன் கோயிலை திறந்து உள்ளே சென்றபோது, கோவிலின் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பிலான உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. உடனடியாக கோயிலுக்குள் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தனர்.
அப்போது ஹெல்மெட் அணிந்த இளைஞர் ஒருவர் கிழக்கு பக்க காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உண்டியல் பூட்டை உடைத்து காணிக்கை எடுத்து தப்பி செல்வது பதிவாகி இருந்தது. இது குறித்து நிர்வாகத் தலைவர் குளச்சல் போலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














