ஜி.வி.பிரகாஷ் குமார், கதையின் நாயகனாக நடிக்கும் படம், ‘கிங்ஸ்டன்’. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கும் இதில் திவ்ய பாரதி, ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபு மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இதை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கும் இந்தப் படம், பிரம்மாண்ட கடல் சாகச ஃபேன்டசி த்ரில்லர் வகையை சேர்ந்தது என்கிறார்கள்.














