சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று தொடக்கம்

0
304

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை தொடர்பாக விவாதிப்பதற்காக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அலுவல் ஆய்வுக்குழு முடிவின்படி, இன்று முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது. வரும் 10-ம் தேதி வரை விவாதம் நடைபெறும். இறுதி நாளான 11-ம் தேதி, விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க உள்ளார்.

சட்டப்பேரவையில் விவாதம் தொடங்கப்படும் நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பில் பேரவைத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, விசிக உள்ளிட்ட கட்சிகள் இது தொடர்பாக நோடடீஸ் வழங்கியுள்ளது குறி்ப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here