கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய வாக்காளர் பட்டியலை நேற்று (ஜனவரி 6) மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டார். அதில் மாவட்டத்தில் 2024 ன்படி மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1698 என்றும், தற்போது உள்ள வாக்குச்சாவடி எண்ணிக்கை 1702 என்றும் கிள்ளியூர் தொகுதியில் புதிதாக 2 வாக்குச்சாவடிகளும், பத்மநாதபுரம் தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளும், மொத்தம் 4 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.














