கருங்கல் அருகே உள்ள கம்பிளார் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமதாஸ் (43). தொழிலாளி. இவருடைய மனைவி ஜெபா. இவர்களின் ஏழு வயதான பெண் குழந்தையை கடந்த மே மாதம் பிரேமதாஸ் தேங்காய்ப்பட்டணம் கடலைப் பார்க்க அழைத்துச் சென்றபோது அலையில் சிக்கி குழந்தை இறந்தது.
அதன் பின்பு கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, ஜெபா தனது தாயார் வீட்டிற்குச் சென்றார். பிரேமதாஸ் தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் நேற்று (ஜனவரி 6) வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது பிரேமதாஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டார்.
அவர் உடல் அழுகிய நிலையில் இருந்தது. கருங்கல் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பிணத்தைக் கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.














