புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதி செந்தறை என்ற இடத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் புதுக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரைட் பிளசிங் தலைமையிலான போலீசார் நேற்று (ஜனவரி 6) அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதி ராஜகுமாரி என்பவர் வீட்டில் நடத்திய சோதனையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 2 கிலோ மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் பறிமுதல் செய்து ராஜகுமாரி மீது வழக்குப் பதிவு செய்தனர்.














