திருவிதாங்கோடு அருகே உள்ள பூக்கடை பகுதி சேர்ந்தவர் ரசல் மகள் பிரதீஷ்கா தர்ஷினி (25). பிஇ பட்டதாரியான இவர் சாமியார்மடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று (ஜன.3) காலை இவர் நாகர்கோவில் இருந்து தக்கலை நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வில்லுக்குறிச்சாலை பகுதியில் ஓரமாக நின்ற ஒருவர் திடீரென பைக்கை எடுத்ததில் பிரதீஷ்கா தர்ஷினி ஸ்கூட்டர் மீது மோதியதாக தெரிகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரதீஷ்கா தர்ஷினி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகார் மீது பைக்கை ஓட்டி விபத்து ஏற்படுத்திய தங்கராஜ் (54) மீது இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














