குமரி மாவட்டம் இரவிபுத்தன் துறை பகுதியை சேர்ந்தவர் லூர்தையன் (64). மீனவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று (டிசம்பர் 22) இவர் புதுக்கடை அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டப பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தவறி விழுந்து சாலையோரத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் லூர்தையன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து லூர்தையனின் சகோதரர் சேவியர் என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














