தமிழுக்கு வரும் மலையாள நடிகர் பி.கே.பாபு

0
434

அபர்ணா பாலமுரளி, ராஜ் பி.ஷெட்டி நடித்துள்ள ‘ருதிரம்’ என்ற மலையாளப் படம் கடந்த 13-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் நடிகராக அறிமுகமானவர் பி.கே.பாபு. இதில் அவர் நடித்த ஜேசன் என்ற கதாபாத்திரமும் அவரின் இயல்பான நடிப்பும் பேசப்பட்டது. இதையடுத்து அவர் தமிழில் நடிக்க இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “முதல் படத்திலேயே அபர்ணா பாலமுரளி, ராஜ் பி.ஷெட்டி போன்ற நடிகர்கள் மற்றும் திறமையான குழுவுடன் பணிபுரிய கிடைத்தவாய்ப்பு சிறப்பானது. ரசிகர்களிடமிருந்து வரும் ஆதரவு மகிழ்ச்சியளிக்கின்றன. சிறந்த கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. மேலும் சில வாய்ப்புகள் வந்துள்ளன. தமிழிலிருந்தும் அழைப்பு வந்துள்ளது. அதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here