சர்வதேச சிறு, குறுந்தொழில்கள் கண்காட்சி 27-ம் தேதி தொடக்கம்: சென்னையில் 3 நாட்கள் நடைபெறுகிறது

0
425

தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) சார்பில், ‘சவ்மெக்ஸ்-2024’ என்ற சர்வதேச கண்காட்சி, சென்னையில் வரும் 27-ம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) சார்பில், ‘சவ்மெக்ஸ்-2024’ என்ற சர்வதேச கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வரும் 27 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பங்கேற்பதுடன், 375-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம் பெறுகிறது. இதற்காக, அரங்குகள் அமைக்கப்படுகிறது.

இந்தக் கண்காட்சியில் மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், கொச்சின் ஷிப்யார்டு, இந்திய விண்வெளி ஆய்வு மையம், தேசிய அனல்மின் கழகம், பிஇஎம்எல் மற்றும் ராணுவ துறையின் கீழ் செயல்படும் நிறுவனங்கள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவை சிறு மற்றும் குறு நிறுவனங்களிடம் இருந்து அதிகளவில் பொருட்களை வாங்குகின்றன. எனவே, இக்கண்காட்சியில் மேற்கண்ட நிறுவனங்களின் அதிகாரிகளை பங்கேற்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டான்ஸ்டியா நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here