கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நேசமணி நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குடும்பத்துடன் நேற்று (டிசம்பர் 19) கடைக்கு சென்று பொருள்கள் வாங்கி விட்டு வீடு திரும்பும் போது, குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. காரில் உள்ள உயிர் பாதுகாப்பு பலூன் திறந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் காரை அப்புறப்படுத்தினர்.














