கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று மாலையில் கோட்டார் கலைவாணர் நகரில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (வயது 24) கஞ்சா பொட்டலத்தை வைத்திருந்ததாக அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பால்ராஜின் தாயாரின் வங்கி கணக்கை போலீசார் முடக்கி நடவடிக்கை எடுத்தனர். பால்ராஜ் மீது கோட்டார், வடசேரி, தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன என போலீசார் தெரிவித்தனர்.
Latest article
சீக்கியர் அல்லாத 14 பேருக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவ் பிறந்த இடமான நான்கானா சாகிப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது.
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சுமார் 2,100 பக்தர்கள் பாகிஸ்தான் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி...
அபுதாபியில் யோகா மையம்: மத்திய அரசு நடவடிக்கை
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 20 மாதங்களுக்கு முன்பாக பிரம்மாண்ட இந்துக் கோயில் திறக்கப்பட்டது. இந்த நிலையில், மற்றொரு கலாச்சார அடையாளமாக அபுதாபியில் இந்திய இல்லம்...
அமெரிக்காவின் நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி தேர்வு: அதிபர் ட்ரம்ப் கட்சி வேட்பாளர் தோல்வி
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஜோரான் மம்தானி வெற்றி பெற்றார். அமெரிக்காவின் மிக முக்கியமான நகரங்களில் நியூயார்க் நகரமும் ஒன்று. இங்கு நடைபெற்ற...














