கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா களைகட்ட தொடங்கியுள்ளது. அந்த வகையில் நேற்று (டிசம்பர் 19) நாகர்கோவில் பகுதியில் குமரியைச் சேர்ந்த ராஜேஷ், அபி, கிஷோர் என்ற 3 கல்லூரி மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து திறந்த வாகனத்தில் வந்து நடனமாடி, மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி பொதுமக்களை மகிழ்வித்தனர்.














