களியக்காவிளை அருகே இடைக்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாலைக்கோடு சிறுகரை பகுதியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் தனியார் மதுபான கடை திறக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்த பா.ஜ.க- கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (19-ம் தேதி) மாலையில் நடந்தது.
இடைக்கோடு பஞ்சாயத்து கட்சி தலைவர் ஜெயவிந்த் தலைமை வகித்தார். மேல்புறம் தெற்கு ஒன்றிய தலைவர் சேசர், வடக்கு ஒன்றிய தலைவர் சுரேஷ் சந்திரன், மாவட்ட செயலாளர்கள் நந்தினி, சுடர்சிங், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் விஜய பிரசாத், சிறுபான்மை அணி துணைத் தலைவர் பவுல்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ், போராட்டத்தில் கிளை தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.














