திற்பரப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் ஸ்ரீஜு (26). இவர் நேற்று (19-ம் தேதி) மாலை பைக்கில் அருமனையில் இருந்து குழித்துறைக்குச் சென்று கொண்டிருந்தார். அண்டுகோடு தபால் நிலைய வளைவு பகுதியில் செல்லும்போது எதிரே வந்த கடமக்கோடு பகுதியைச் சேர்ந்த சிங்காரம் மகன் அபி (20) என்பவர் பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் அபி படுகாயம் அடைந்து சுயநினைவை இழந்தார். ஸ்ரீஜுவும் படுகாயம் அடைந்தார். இருவரையும் பொதுமக்கள் மீட்டு அங்கு உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அபி திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அபி இறந்தார். ஸ்ரீஜு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அருமனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














