ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் பிரியங்கா காந்தி

0
167

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் பிரியங்கா காந்தி இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும். ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அரசியல் சாசன திருத்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) பரிசீலனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில், ஜேபிசி குழுவில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மணிஷ் திவாரி, சுக்தேவ் பகத் மற்றும் ரந்தீப் சுர்ஜிவாலா ஆகியோர் இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இதுபோல மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கல்யாண் பானர்ஜி மற்றும் சாகேத் கோகலே பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மக்களவையைச் சேர்ந்த 21 மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 20 பேர் என மொத்தம் 31 எம்.பி.க்கள் ஜேபிசியில் உறுப்பினர்களாக இடம்பெறுவார்கள். இக்குழுவுக்கு பாஜகவைச் சேர்ந்தவர் தலைவராக நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here