கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டையொட்டி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நாகர்கோவில் வரும் ரயில்கள் நிரம்பியுள்ளன.
இதனால் நாகர்கோவில் வரும் பயணிகளுக்கு வசதியாக கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். இதே போன்று இந்த பண்டிகை முடிந்த பின்பு நாகர்கோவிலில் இருந்து பயணிகள் செல்வதற்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.














