தக்கலை: நள்ளிரவில் கண்டெய்னர் மோதி போலீஸ் படுகாயம்

0
169

தக்கலை அடுத்த புலியூர்குறிச்சி தேசிய சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நெடுஞ்சாலை போலீசார் வாகனங்கள் சோதனையில் இருந்தனர். 

அப்போது கண்டெய்னர் லாரிகளையும் நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்தனர். இந்த நிலையில் நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி டிரைவர் போலீசை பார்த்ததும் வாகனத்தை திடீரென நிறுத்த முயன்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ் ஏட்டு ஜஸ்டின் சந்திரன் என்பவர் மீது லாரி மோதியது. 

இதில் அவரது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பாக தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, கண்டெய்னர் லாரி டிரைவர் தூத்துக்குடியை சேர்ந்த துரை (49) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here