​மாதவரம் – கோயம்​பேடு 100 அடி சாலை வரை மெட்ரோ நிலைய மின், இயந்திர அமைப்பு

0
214

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 5-வது வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் கோயம்பேடு 100 அடி சாலை மெட்ரோ ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயில் நிலையங்களில் மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் ஜாக்சன் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடமும் ஒன்றாகும்.

இந்த தடத்தில் மாதவரம் பால் பண்ணை மெட்ரோ ரயில் நிலையம் முதல் கோயம்பேடு 100 அடி சாலை மெட்ரோ ரயில் நிலையம் வரை நிலையங்களில் மின்சாரம், தீ பாதுகாப்பு, காற்றோட்டம் மற்றும் மின்சாதன வசதி போன்ற மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.1,68.16 கோடி மதிப்பில் ஜாக்சன் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), ஜாக்சன் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் அங்கூர் கோயல் ஆகியோர் நேற்று முன்தினம் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஆலோசகர்கள்

எஸ்.ராமசுப்பு, எஸ்.கே. நடராஜன், கூடுதல் இணை பொதுமேலாளர் எல். அபித் அலி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் ஜாக்சன் லிமிடெட் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறும்போது, “5-வது வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணை மெட்ரோ ரயில் நிலையம் முதல் கோயம்பேடு 100 அடி சாலை மெட்ரோ ரயில் நிலையம் வரை 10 உயர்மட்ட நிலையங்கள் மற்றும் 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சாரம், தீ பாதுகாப்பு, காற்றோட்டம் மற்றும் குளிர்சாதனம் போன்ற மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தொடர்ந்து சோதனை நடத்தப்படும்” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here