ஊழியர் விரோத போக்கை கடைபிடிக்கும் பி.எஸ்.என்.எல். மாநில நிர்வாகத்தைக் கண்டித்து நேற்று (டிசம்பர் 11) மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபால் தலைமை தாங்கினார். சுயம்புலிங்கம் கோரிக்கையை விளக்கி பேசினார். தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலாளர் பழனிசாமி, நிர்வாகிகள் செல்வம், ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் பிரதீப்குமார் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.














