மார்த்தாண்டம் சுற்றுவட்டார ஆட்டோ டிரைவர்கள் ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் போலீசாருடன் இணைந்து ஆட்டோ டிரைவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். குறிப்பாக மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது, போதையில் ஆட்டோ ஓட்டக்கூடாது என்று தீர்மானங்கள் முழுமனதாக முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மார்த்தாண்டம் போக்குவரத்துச் சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையில் போலீசார் நேற்று (10-ம் தேதி) மார்த்தாண்டம் மேம்பாலம் பகுதியில் சோதனை செய்தபோது மூன்று ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு தலா ரூ. 2500 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்காமல் போதையில் ஆட்டோ ஓட்டிய 3 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.














