முஞ்சிறை அருகே பரவிளை பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சுகின்(22) நர்சிங் மாணவர். நேற்று முன்தினம் (9-ம் தேதி) இரவு 8- மணியளவில் இவர் பைக்கில் புதுக்கடை பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் ரெக்ஸ் பால்ஸ்டன் (23) என்ற நண்பருடன் தேங்கா பட்டணம் – கருங்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தேங்காபட்டணம் அருகே அயினிவிளை பகுதியில் செல்லும் போது எதிரே றாபின் என்பவர் ஓட்டி வந்த கார் மோதியதில் சுகின், ரெக்ஸ் பால்ஸ்டன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதில் சுகின் குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியிலும், ரெக்ஸ் பால்ஸ்டன் புதுக்கடை பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.














