கீழ்குளம் பேரூராட்சியில் தூய்மை காவலர்களாக சுமார் 35 பேர் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்ற அரசின் வேண்டுகோளை ஏற்று, கிள்ளியூர் வட்டார மருத்துவர்கள் குழுவாக வந்து பேரூராட்சியில் நேற்று ( 9-ம் தேதி) முகாம் நடத்தினார்கள்.
கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால் தலைமையில் செயல் அலுவலர் ரெகுநாதன் முன்னிலை வகித்தார். இதில் பேரூராட்சி பணியாளர்கள், ஒன்றிய திமுக செயலாளர் பி கோபால் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.














