கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று திடீரென்று ஆய்வு செய்தார். கடந்த சில தினங்கள் முன்பு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் கழிவறை வசதி இல்லை என்று கூறி பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த ஆய்வை இங்கு மேற்கொண்டார்.














