பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட கலையரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டி நிகழ்ச்சி இன்று (8-ம் தேதி) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில்: – இந்த திறன் பயிற்சியில் 87 இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
அவர்களில் 50 சதவீதத்திற்கும் மேல் திறன் பயிற்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். அதில் ஒரு மாணவி நாளையே கோத்தகிரியில் உள்ள நர்சிங் பயிற்சி மையத்தில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். குமரி மாவட்ட பழங்குடியின இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஊட்டி, பழங்குடியினர் நல ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் (பொ) உதயகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.














