தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பினோராஜன் (40). இவர் துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் கடையின் மேஜையில் வைத்திருந்த பினோராஜனின் கைக்கடிகாரம் திடீரென மாயமானது. அப்போது கடைக்குத் துணி வாங்க வந்த ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வினோராஜனின் கடைக்கு அதே நபர், குலசேகரம் பகுதிச் சேர்ந்த தனியார் கல்லூரிக் கேண்டீன் ஊழியர் பிஜு (40) என்பவர் வந்தபோது, காணாமல் போன தனது கைக்கடிகாரத்தை எடுத்தீர்களா என ராஜன் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரம் அடைந்த பிஜு தனது பையில் வைத்திருந்த மதுப்பாட்டிலால் வினோராஜனின் தலையில் தாக்கினார்.
இதில் காயமடைந்த அவரை சிகிச்சைக்காகத் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து பிஜுவைக் கைது செய்தனர்.














