நித்திரவிளை: கேரள மீனவர்களை காப்பாற்றிய குமரி மீனவர்கள்

0
283

கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட வள்ளவிளை பகுதியைச் சேர்ந்த மெஜில் என்பவரின் விசைப்படகு ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு தேங்காப்பட்டணம் மீன்பிடிதுறைமுகம் நோக்கி கடந்த 1-ம் தேதி வந்துகொண்டிருந்தது. 

கொச்சி அருகே வந்தபோது ஆழ்கடலில் ஒரு ஃபைபர் படகு எஞ்சின் பகுதி உடைந்து 6 கேரள மீனவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தனர். உடனே விசைப்படகில் இருந்த வள்ளவிளை மீனவர்கள் ஆறு மீனவர்களை மீட்டு தங்கள் படகில் ஏற்றினர். பழுதடைந்த கேரளா உட்கார்ந்துபடகை விசைப்படகில் கட்டி இழுத்துவந்தனர். 

ஆனால் அது கடலில் மூழ்கியது. இதையடுத்து குமரி மீனவர்கள் ஆறு கேரள மீனவர்களை அவர்களது சொந்த ஊரான கொல்லம் பகுதியில் கடந்த 4-ம் தேதி அதிகாலையில் இறக்கிவிட்டு, தேங்காப்பட்டணம் மீன்பிடிதுறைமுகத்திற்கு வந்தனர். தமிழக மீனவர்கள் காப்பாற்றிய இந்த வீடியோ தற்போது வாட்ஸாப்பில் வைரலாகப் பரவிவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here