மதுரை அழகர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

0
430

மதுரையில் பிரசித்தி பெற்ற கள்ளழகர், மீனாட்சி அம்மன் கோயில்களில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். மேலும் கருப்பணசுவாமிக்கு அரிவாள் நேர்த்திகடனும் அவர் செலுத்தினார்.

பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்தாலும், சமீபத்தில் வெளியான ‘அமரன்’ பட மூலம் புகழ் பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் மதுரை கள்ளழகர் கோயிலுக்கு இன்று (டிச.08) வந்தார். மலை மீதுள்ள ஆறாவது படை வீடு, பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலிலும் தரிசனம் செய்தார். காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதி சென்று அங்கும் சுவாமி தரிசனம் செய்தார்.

கருப்பணசாமி ஆலயத்திற்கு காணிக்கை செலுத்தும் விதமாக அரிவாள் வழங்கினார். தொடர்ந்து அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, பிரசாதமும் வழங்கப்பட்டது.

நடிகர் சிவகார்த்திகேயன் அழகர்கோயிலுக்கு வந்த தகவலை தொடர்ந்து அவரை கண்டதும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் தங்களது செல்போன்களில் போட்டி போட்டுக் கொண்டு அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்பன் திருப்பதி போலீசார் பாதுகாப்பு அளித்தனர். முன்னதாக காலையில் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று, அம்மன், சுவாமி சன்னதியில் தரிசனம் செய்தார். சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘அமரன்’ திரைப்படம் மூலம் அவருக்கு பாராட்டுகளை குவிந்த நிலையில், மதுரை அழகர் கோயிலில் அவர் சுவாமி தரிசனம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here