அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்தோருக்கு ரூ.50,000 பரிசு

0
211

வார விடு​முறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்​களில் முன்​ப​திவு செய்து பயணிப்​போரை ஊக்கு​விக்​கும் விதமாக மூன்று பேருக்கு தலா ரூ.10,000 வழங்​கும் திட்டம் ஜனவரி முதல் நடைமுறை​யில் உள்ளது.

நவம்பர் மாதம் முதல் வாரத்​தின் அனைத்து நாட்​களி​லும் பயணம் செய்ய முன்​ப​திவு செய்​யும் அனைத்து பயணச்சீட்டு​களும் மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதி பெறும் வகையில் திட்டம் விரிவுபடுத்​தப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, கடந்த மாதத்​துக்கான 13 வெற்றி​யாளர்களை கணினி குலுக்கல் முறை​யில், பல்லவன் போக்கு​வரத்து அறிவுரை பணிக்​குழு மேலாண் இயக்​குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேர்வு செய்​தார். தேர்​வானோருக்கு விரை​வில் பரிசுத் தொகை வழங்​கப்​படும் என போக்கு​வரத்​துத் துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here