அருமனை அருகே கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் அப்பா முஜீப் மகள் சமீகா பர்வீன். இவர் மலேசியாவில் நடந்த காது கேளாதோருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும், 100 மீட்டர் தடை தாண்டலில் தங்கமும் வென்று நேற்று (5ஆம் தேதி) சாதனை படைத்துள்ளார். இவர் இந்தியா சார்பில் வெளிநாடுகளில் பல போட்டிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. சுமார் 11 வருடங்களாக விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு இருக்கிறார்.
தற்போது சென்னையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான கல்லூரியில் இரண்டாவது ஆண்டு பிஏ படித்து வருகிறார். வரும் 8ஆம் தேதி மாணவி சமீகா பர்வீன் டெல்லி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு வழங்கப்படுகிறது. அதன்பிறகு 9ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் வரும் மாணவிக்கு தமிழக சார்பாக வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்பின் தமிழக முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற உள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.














