மார்த்தாண்டம்: இந்து மத அடையாளங்களை தார் பூசி அழிப்பு

0
162

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலை கடை பகுதியில் ஸ்ரீ முறியம்பாறை பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் பல தலைமுறைகளாக அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். சுமார் 3 ஏக்கர் நிலம் கோவிலுக்கு சொந்தம் என உள்ளதாகவும், இதில் ஒரு ஏக்கர் பரப்பில் பாறைகள் நிறைந்துள்ளன.

மேலும் இந்த பாறைகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு சுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோவிலுக்கு செல்லும் பாதையை சேதப்படுத்தியுள்ளதாகவும், பாறைகளை உடைத்து கடத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அங்குள்ள பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ள இந்து மத இறை நாமங்கள், ஓவியங்களை தார் பூசி அழித்ததாகவும் கூறப்படுகிறது. கோவில் தலைவர் பால்ராஜ் மாவட்ட ஆட்சியர் மற்றும் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here