நித்திரவிளை அருகே நம்பாளி பகுதியில் நேற்றிரவு 6:30 மணியளவில் வயதான நபர் ஒருவர் பாதை தெரியாத நிலையில் உட்கார்ந்திருந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அவரிடம் விசாரித்தபோது, காஞ்சிபுரம் மற்றும் நடைக்காவு ஆகிய பகுதிகளில் உறவினர்கள் இருப்பதாக தெரிவித்தார். பொதுமக்கள் அவரின் கால் சட்டையை சோதனை செய்துபார்த்தபோது, அவரது ஆதாரில் சேரன்மகாதேவி, அனவாதநல்லூர் தெரு என்றும் விஜயராஜன் என்றும், அரசு போக்குவரத்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வுபெற்ற ஐ.டி. யும் இருந்தது. பாதை மாறி முதியவர் வந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் உறவினர்களிடம் தெரிவித்தனர்.














