தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் ஆதரவோடு, எஸ்ஐவியுஎஸ் இந்தியா மற்றும் எஸ்ஐவியுஎஸ் தமிழ்நாடு ஆகிய இணைந்து 2024-ம் ஆண்டிற்கான எஸ்ஐவியுஎஸ் இந்தியா தேசிய ஓபன் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்தில் உள்ள நீச்சல் மையத்தில் நடத்தின. 3 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில்
அறிவுசார் குறைபாடு, ஆட்டிசம் மற்றும் டவுன் சிண்ட்ரோம் உடையோர் பங்கேற்றனர். தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் வீரர்கள் கலந்து கொண்டனர். கடைசி நாளான நேற்று ஆடவர் பிரிவில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 மீட்டர் பேக்ஸ்டிரோக்கில் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.சஞ்ஜித் மணி பந்தய தூரத்தை 1:15.9 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அலி ராசா வெள்ளிப் பதக்கமும், தமிழகத்தைச் சேர்ந்த கே.லக் ஷய் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை அரசிந்த் நைனார், எஸ்ஐவியுஎஸ் நிறுவனர் ஆரோன் ரிச்சர்ட், சைரஸ் இந்தியா தலைவர் பால் தேவசகாயம் ஆகியோர் செய்திருந்தனர். 3 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகம் 67 தங்கப் பதக்கத்துடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. 2-வது இடத்தை மேற்கு வங்கம், மகாராஷ்டிரா பகிர்ந்து கொண்டன. கர்நாடகா 3-வது இடத்தை பிடித்தது.
சிறப்பு விளையாட்டு வீரர்களுக்கான தேசிய அளவிலான நீச்சல் போட்டி எஸ்ஐவியுஎஸ் இந்தியா அமைப்பு சார்பில் வேளச்சேரியில் நடைபெற்றது. இதன் இறுதி நாளான நேற்று ஆடவர் பிரிவில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 மீட்டர் பேக்ஸ்டிரோக்கில் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.சஞ்ஜித் மணி (நடுவில் இருப்பவர்) தங்கப் பதக்கம் வென்றார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அலி ராசா வெள்ளிப் பதக்கமும், தமிழகத்தைச் சேர்ந்த கே.லக் ஷய் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.














