மார்த்தாண்டத்தில் இருந்து கொல்லங்கோட்டிற்கு நேற்று (4-ம் தேதி) தடம் எண் 82 எம் என்ற அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. பஸ்சில் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் படிக்கட்டின் மேல் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது முதியவர் திடீரென தவறி சாலையில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பயணிகள் சத்தம் போடவே ஓட்டுநர் பஸ்சை நிறுத்தினார். தலையில் படுகாயத்துடன் மயக்கமடைந்து கிடந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் குதித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நிலைமை மோசமாக இருந்ததால் தொடர்ந்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








