நித்திரவிளை அருகே உள்ள எஸ் டி மங்காடு பகுதியை சேர்ந்தவர் விஜயன் (64). இவர் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். சம்பவ தினம் மாலையில் விஜயன் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க நடைக்காவு என்ற பகுதிக்கு மோட்டார் சைக்கிள் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தடுமாறி விழுந்தது. இதில் விஜயன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














