7 பேரை கொன்ற லஷ்கர் தீவிரவாதி சுட்டுக்கொலை

0
150

6 தொழிலாளர்கள், டாக்டரை கொன்ற லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜுனாயித் அகமது பட். இவர் பாகிஸ்தானிலுள்ள லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர். கஹாங்கீர், கந்தர்பால் பகுதியில் 6 தொழிலாளர்கள், ஒரு டாக்டரை சுட்டுக் கொன்ற வழக்கில் இவரை போலீஸார் தேடி வந்தனர். கடந்த ஓராண்டாக இவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று கந்தர்பால் பகுதியில் நடந்த என்கவுன்ட்டரில் ஜுனாயித் அகமது பட்டை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

மேலும், தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த மர்யாமா பேகம், அர்ஷத் பேகம் ஆகிய 2 பெண்களை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மக்களோடு மக்களாக கலந்து, உளவு வேலையைப் பார்த்து வந்தனர் என போலீஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here